சாய்ந்தமருது பகுதியில் பாடசாலை மாணவன் எடுத்த விபரீத முடிவு
இரவு தூங்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம், அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இன்று(09.01.2026) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர், சாய்ந்தமருது 16 கபூர் வீதியைச் சேர்ந்த ஜௌபர் மொஹமட் விஸ்ருல் ஹாபிஸ் என்ற 16 வயதுடைய சிறுவன் ஆகும்.
பொலிஸார் விசாரணை
குறித்த சிறுவன், கடந்த 6 மாத காலமாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் 3 மாதங்கள் பாடசாலை செல்லவில்லை என்றும் இது கூட மாணவனின் விபரீத முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற அம்பாறை மாவட்ட தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த பின்னர், கல்முனை நீதிமன்ற நீதிவானின் கட்டளைக்கு அமைய குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை