நுவரெலியா கிரகரி வாவி கரையில் சிசுவின் சடலம் மீட்பு
நுவரெலியா - கிரகரி வாவி கரையோரத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(01.02.2026) குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சிசுசிசு சடலம் மீட்பு
கிரகரி வாவியில் படகு சவாரி செய்யும் ஊழியர்கள் மற்றும் உயிர் காப்பு பொலிஸார் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், குறித்த சடலம் புதிதாக பிறந்த சிசு ஒன்றினுடையது என்பதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் தொப்புள் கொடியின் ஒரு பகுதி இன்னும் இருப்பதையும் கண்டறிந்தனர். இதனால், இந்தப் பிரசவம் வைத்தியசாலையில் நடைபெறவில்லை என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணை
இதனையடுத்து பொலிஸார், நீதிமன்ற உத்தரவை பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri