மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்க சென்றவர் சடலாக மீட்பு
மட்டக்களப்பில் - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பகுதி வாவியில் தோணியில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் தோணியிலிருந்து தவறி வாவியில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று(11) காலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரையம்பதி 3 பிரிவு திருநீற்றுக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நவரெத்தினம் துசாந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வழைபோல மீன்பிடிக்க சம்பவதினமான இன்று காலையில் சென்றவர் தோணியிலிருந்து தவறி வாவியில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan