யாழில் வெவ்வெறு இடங்களில் இருவரின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் , மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(31.03.2026) இடம்பெற்றுள்ளது.
அல்வாய் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் (வயது 78) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்பு
குறித்த முதியவர் நேற்றைய தினம்(30.03.2026) தனது வீட்டாருடன் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறியவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம்(31) செவ்வாய்க்கிழமை காலை முதியவர் வியாபாரி மூளை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எண்ணெய் கிணறுகளை அழிக்கப்போவதாக டிரம்பின் நேரடி எச்சரிக்கை: 2022இற்கு பின் முதல்முறையாக நடந்த மாற்றம்
75 வயது முதியவரின் சடலம் மீட்பு
இதேவேளை, யாழ்ப்பாணம் - இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று(31.03.2026) கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸார், முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவர் சுதுமலை பகுதியை சேர்ந்த 75 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான காசிப்பிள்ளை மாதுருபாகன் என தெரியவந்துள்ளது.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam