யாழில் பேருந்து நிலையத்திலிருந்து முதியவரின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் - உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாவை கலட்டி, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை என்ற முகவரியைச் சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் அப்பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக யாசகம் பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலத்தை மீட்ட சுன்னாகம் பொலிஸார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam