மன்னாரில் விபத்தில் பலியான குழந்தையின் சடலம் மீண்டும் அகழ்வு - நீதிமன்ற உத்தரவு..!
மன்னார் - தாராபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட துருக்கி சிட்டி பகுதியில் விபத்தில் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயது ஏழு மாத குழந்தையின் சடலம், மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தாராபுரம் மையவாடியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை இன்று(21.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி, துருக்கி சிட்டி பகுதியில் பாண் விற்பனைக்காக சென்ற முச்சக்கர வண்டி ஒன்று குறித்த குழந்தையின் மீது மோதியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் குழந்தையை உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், குழந்தை உயிரிழந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அகழ்வு பணி முன்னெடுப்பு
அதன் பின்னர், மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, கடந்த 19ஆம் திகதி தாராபுரம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மன்னார் பொலிஸார் சடலம் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ளாமல் ஒப்படைத்ததாக சந்தேகம் எழுந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், குறித்த விவகாரம் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த நீதவான் இன்று (21) குறித்த குழந்தையின் சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக தோண்டி எடுக்க உத்தரவிட்டார்.
இதன்படி, சடலம் நீதவான் முன்னிலையில் மீண்டும் அகழ்ந்து எடுக்கப்பட்டது.
இந்த அகழ்வு நடவடிக்கையில், மன்னார் பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸார் மற்றும் தொடர்புடைய தரப்பினர் அனைவரும் ஈடுப்பட்டுள்ளனர்.



விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam