கொழும்பில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு
மருதானை - ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள பாலம் ஒன்றிற்கு அருகிலிருந்து இனந்தெரியாத ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலத்திற்கு அருகில் நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக மருதானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (29.10.2023) காலை பொலிஸார் அந்த சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நடவடிக்கை
சடலமாக மீட்கப்பட்ட நபர் யாரென உறுதிப்படுத்தப்படவில்லையென தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவர் 30 வயதுடையவரெனவும் 5 அடி 8 அங்குல உயரமுடைய மெல்லிய உடல்வாகுடையவர் எனவும் தாடியுடன் காணப்படும் நபர் ஊதா நிற காற்சட்டை மற்றும் நீல நிற டி சேர்ட் அணிந்தவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
மேலும், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
