அரநாயக்கவில் சிறிய நீரோடையொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு
அரநாயக்கவில் சிறிய நீரோடை ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அரநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதெனிய வத்த வழியாகச் செல்லும் ஒரு சிறிய நீரோடையில் இருந்தே பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட சடலம், அம்பதெனிய வத்தவைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
அவரை இரண்டு நாட்களாகக் காணவில்லை என அவரது உறவினர்கள் அரநாயக்க பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தனர்.
அப்பகுதி மக்கள் இரண்டு நாட்கள் நடத்திய தேடுதலுக்குப் பிறகு, அம்பதெனிய வத்த வழியாகச் செல்லும் ஒரு சிறிய நீரோடையில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இறந்தவரின் மகள், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்றும் தமது கிராமத்தில் கிராமத்தில் போதைக்கு அடிமையானவர்கள் அதிகம் உள்ளனர் என்றும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கிடையே சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை மிகவும் சிரமத்துடன் சென்றடைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.