வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை
வவுனியா - ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (24.02.2026) இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
அந்தப் பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக ஈரற்பெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 40 - 45 வயதுக்குள் மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை அவர் அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது உடலின் ஒரு பகுதி தீயால் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


