திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு (Photos)
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிங்க நகர் கடலில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாகத் துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி நடவடிக்கைக்காக கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் சென்ற நிலையில், சடலம் மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை இலிங்க நகர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகநாதன் கருணாகரன் (வயது-49) எனவும் தெரியவருகின்றது.
குறித்த சடலத்தைத் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் தர்ஷினி அண்ணதுரை முன்னிலையில் குடும்பத்தினர் அடையாளப்படுத்தினர்.

மேலும் குறித்த சடலம் தொடர்பில் பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் இதன்போது நீதவான் கட்டளையிட்டார்.
குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் துறைமுக பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam