கிண்ணியாவில் கடை ஒன்றின் முன்னால் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கிண்ணியா- தோனா கடலூர் முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று(16) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூரை சேர்ந்த 55 மதிக்கத்தக்க திருமணமானவரின் சடலமாக இருக்கக்கூடும் என கிண்ணியா பொலிஸார் ஆரம்ப விசாரணையின் போது தெரிவித்தனர்.
சடலம் மீட்பு
கிண்ணியா தோனாவில் கடலூர் முருகன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான கடையொன்றின் முன்னால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிகப்பு நிற சட்டையும், சாம்பல் நிற கருப்பு கோடு போட்ட சாரணனும் அணிந்திருந்தார். அருகில் ஜெய்ப்பூர் கால் ஒன்றை கழட்டி வைத்ததவாரே இருந்துள்ளார்.
அவர் ஊன்றிச் செல்லும் கை தாவல் ஒன்றும் சடலம் காணப்படும் இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் காணப்படுகின்றது.இரவு இவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணை
காலையில் சடலத்தை கண்ட கிண்ணியா பொதுமக்கள் சிலர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பொலிஸார் அங்கு விஜயம் செய்து சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam