கதிர்காமத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு
மொனராகலை, கதிர்காமம், சித்துல்பவ்வ வீதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (22.04.2025) இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் இந்த சுற்றுலா விடுதியில் பணியாளராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சுற்றுலா விடுதியின் உரிமையாளர் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலத்தில் பல வெட்டு காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது கொலையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணகைளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
