பாரிஸில் சூட்கேஸ் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 12 வயது சிறுமியின் சடலம் சூட்கேஸ் ஒன்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வராததால் சிறுமியின் தந்தை கவலை அடைந்துள்ளார்.

இந்நிலையில் அன்றைய தினமே பாரிஸின் வடகிழக்கு 19வது வட்டாரத்தில் உள்ள உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி கடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, துப்பறியும் நபர்கள் விரைவாக விசாரணையைத் தொடங்கினர்.
சிறுமியின் தொண்டையில் வெட்டுகாயங்கள்
இதன் படி மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கையின் போது கட்டிடத்திற்கு வெளியே ஒரு பெண் சூட்கேஸை எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காணொளி உதவியுடன் இது குறித்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில வீதிகளுக்கு அப்பால் rue d'Hautpoul இல் சிறுமியின் சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் தொண்டையில் பல வெட்டுக்கள் இருந்ததாகவும். பிரேத பரிசோதனை சனிக்கிழமை நடைபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பேர் தற்போது காவலில் உள்ளனர்.
எனினும் அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுகப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri