கல்முனையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் : குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட சடலம்
கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள 15 வயது சிறுவனின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை திருடியதற்காக குறித்த சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பாடசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
விசாரணை முடிவுகள்
தொடர்ந்து கடந்த மாதம் 29ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தனது மகன் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக மரணமடைந்தவரின் தந்தை தெரிவித்திருந்தார்.
இதேவேளை, உயிரிழந்த சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்று பரிசோதனை மூலம் தெரியவந்ததுள்ளது என சிறுவனின் தந்தைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
