பயணப்பையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு: கொழும்பின் புறநகர் பகுதியில் பரபரப்பு
புதிய இணைப்பு
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் இருந்து பயணப்பையில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பெண், இரண்டடை அடி நீளம் கொண்ட பயணப்பையில் சடலமாக காணப்பட்டதாகவும், அவர் சிகப்பு மற்றும் கறுப்பு நிறத்திலான உடை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
கொழும்பின் புறநகர் பகுதியான சப்புகஸ்கந்த - மாபிம என்ற இடத்தில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்த்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.
கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பயணப்பையொன்றை சோதனையிட்ட போதே அதில் பெண்ணின் சடலம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You may like this

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
