மட்டக்களப்பில் வாவியில் மிதந்து வந்த சடலம் - தீவிரப்படுத்தப்படும் விசாரணை
மட்டக்களப்பு - காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(19.05.2026) இடம்பெற்றுள்ளது.
ஆணொருவரின் சடலம் மீட்பு
குறித்த வாவியில் சடலம் ஒன்று நீரில் மிதப்பதை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சடலமாக மிதந்தவர் ஆண் ஒருவர் என்றும், ஆனால் அடையாளம் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri