மெக்ஸிகோவில் காரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்! விசாரணைகள் தீவிரம்
மெக்ஸிகோவில் கார் ஒன்றிலிருந்து 10 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் மெக்ஸிகோவின் ஸகாடேகாஸ் மாநிலத்தில், மாநில ஆளுநரின் அலவலகத்துக்கு வெளியே வியாழக்கிழமை கைவிடப்பட்டுக் கிடந்த காரில் இச்சடலங்கள் காணப்பட்டுள்ளன.
Mazda SUV ரகத்தைச் சேர்ந்த காரிலிருந்தே இச்சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் டேவிட் மொன்றியல் கூறியுள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் சடலங்களை வைத்துவிட்டுச் செல்வதற்காக வந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் உள்ளூர் அதிகாரிகளின் விசாரணைக்கு உதவிகளை வழங்குவதாக மெக்ஸிகோ பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri