இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி நிகழ்த்தியுள்ள சாதனை!
இலங்கை வங்கி (BOC) மற்றும் தேசிய சேமிப்பு வங்கி (NSB) ஆகியவை 2024 ஆம் ஆண்டிற்கான சாதனை இலாபத்தை ஈட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகள்
இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொயிசா மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் கலாநிதி ஹர்ஷ் கப்ரால் ஆகியோரால் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இந்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் நிநி நிறுவனம் அல்லது வங்கியொன்று பெற்றுக்கொண்ட அதிகமான இலாபமாக இலங்கை வங்கி 106 பில்லியன்களை இலபமாக ஈட்டியுள்ளதென இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த இலாபம், வரி அறிவிப்புக்கு முன் பெற்றுக்கொண்டதாகவும் வர்த்தக அபிவிருத்தி, சிறு மற்றும் மத்தியத்தர தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நிதி நிறுவனங்கள் வரிசையில் இலங்கை வங்கி முதன்மை நிலையில் இருப்பதாகவும் அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெற்றி
இதன்போது கருத்து தெரிவித்த, தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் கலாநிதி ஹர்ஷ கப்ரால், 2023 ஆம் ஆண்டில் தேசிய சேமிப்பு வங்கி பெற்றுக்கொண்ட 4.2 பில்லியன் இலாபத்தை 2024 ஆம் ஆண்டில் 26.4 பில்லியன்களாக அதிகரித்துக்கொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேசிய சேமிப்பு வங்கி இந்த வெற்றியை அடைந்துகொள்வதற்கு நாட்டில் காணப்படும் பொருளாதார ஸ்திரத்தன்மையும், நிதி ஒழுக்கமுமே காரணமாக அமைந்ததென ஹர்ஷ கப்ரால் கூறியுள்ளார்.
அத்துடன் 2025 ஆம் ஆண்டிலும் இதனை மிஞ்சிய வெற்றியை அடைந்துகொள்ள தேசிய சேமிப்பு வங்கி எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
