நெடுந்தீவு கடலில் மூழ்கிய படகு: உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்
நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (12) மதியம் நடைபெற்றுள்ளது.
அத்துடன், படகில் பயணித்த பயணிகள் 12 பேர், 02 பணியாளர்கள் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.
படகில் ஏற்பட்ட கோளாறு
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தென்னிலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலாப் பயணிகளுடன் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளது.

இந்தநிலையில், இடைக்கடலில் குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகு பணியாளர்கள் அவதானித்து விரைந்து செயற்பட்டு சேதமடைந்த படகில் இருந்த சகல சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக தமது படகிற்கு மாற்றியுள்ளனர்.
பயணிகள் மீட்பு
ஓரிரு நிமிடங்களில் குறித்த சுற்றுலாப் பயணிகள் படகு முழுமையாக நீரில் முழ்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் கடற்படையினரது படகு குறித்த இடத்திற்கு வந்து மீட்கப்பட்ட பயணிகளை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு குறிகாட்டுவானை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 11 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri