பிரான்ஸ் கடல் பகுதியில் மூழ்கிய படகு: பிரித்தானியக் கனவுடன் சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாபநிலை
பிரித்தானியாவுக்குச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்கும் கனவுடன் புறப்பட்ட புலம்பெயர்வோர் ஒருவர் ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் நேற்று நிகழ்ந்தது.
வடக்கு பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட சிறிய படகு ஒன்றில் சிலர், ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களது படகு பழுதடைந்துள்ளது.
படகு மூழ்கி, படகிலிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளிக்க, பிரான்ஸ் பொலிஸார் அவர்களை மீட்பதற்காகச் சென்றுள்ளார்கள். 30 பேர் தண்ணீரிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், சூடான் நாட்டைச் சேர்ந்த 20 வயதுகளிலிருக்கும் ஒருவர் ஆவார். இந்த சம்பவம், பிரான்சிலிள்ள பெர்க் என்ற இடத்தின் அருகிலுள்ள கடல் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இதிலிருந்து மக்களை பிரித்தானியாவுக்குள் அனுப்பும்
கடத்தல்காரர்கள், கலாயிஸ் போன்ற இடங்களிலிருந்து மட்டுமல்ல, பல்வேறு
இடங்களிலிருந்து புலம்பெயர்வோரை ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள்
அனுப்புவது தெரியவந்துள்ளது.