ஏமனில் படகு கவிழ்ந்து விபத்து: 39 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் மாயம்
260 புலம்பெயர்ந்தோருடன் பயணித்த படகு ஒன்று ஏமன் கடற்கரையருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த படகு ஹார்ன் ஒ ஃப் ஆப்பிரிக்காவிலிருந்து ஏடனின் கிழக்கே பகுதியை நோக்கிய பயணித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில், 39 பேர் பலியாகியுள்ளதுடன், 140 பேரை காணவில்லை என ஐ.நாவின் சர்வதேச புலம்பெயர்தல் அமைப்பு, எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தீவிரம்
படகிலிருந்த மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என 78 பேர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் காணாமற்போனவர்களை தேடி மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கடந்த வருடம் மாத்திரம் 97,000 புலம்பெயர்ந்தோர் ஹார்ன் ஒஃப் ஆப்பிரிக்காவிலிருந்து யேமனுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |