தொடரும் அனர்த்தங்கள்! 330ஐ கடந்த பலி எண்ணிக்கை
update - 08:15PM
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, காணாமல் போனோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, கண்டியில் 88 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 பேர் காணாமல் போயுள்ளனர்.
பதுளையில் 71 பேர் உயிரிழந்துள்ளதுடன், 53 பேர் காணாமல் போயுள்ளனர்.
நுவரெலியாவில் 68 பேர் உயிரிழந்துள்ளதுடன், 64 பேர் காணாமல் போயுள்ளனர்.
குருநாகல் பகுதியில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் காணாமல் போயுள்ளனர்.
மாத்தளை பகுதியில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காணாமல் போயுள்ளனர்.
கேகலை பகுதியில், 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், மொனராகலை, கொழும்பு, மட்டக்களப்பு, அநுரதாபுரம், முல்லைத்தீவு, அம்பாறை, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, காலி, கம்பஹா, வவுனியா ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 35 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
புதிய இணைப்பு
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 218 பேர் காணாமல் போயுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 4 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின் படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலாம் இணைப்பு
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அனர்த்த நிலை காரணமாக, 228 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தில் அறிக்கை தெரிவிக்கின்றது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் மிக அதிகளவிலான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
அதிக உயிரிழப்புக்கள்
பதுளை மாவட்டத்தில் இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளதுடன், 53 பேர் காணாமல் போயுள்ளனர். கண்டி மாவட்டத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளடன், 105 பேர் காணாமல் போயுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 20 உயிரிழந்துள்ளடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் காணாமல் போயுள்ளனர்.
மேலும், மொனராகலை, கொழும்பு, கேகாலை, அம்பாறை, யாழ்ப்பாணம், நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, காலி, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களிலும் 35 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.


உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam