மலேசியாவில் கடல் பகுதியில் மீண்டும் படகு விபத்து: புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு
இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவைச் சட்டவிரோதமாகச் சென்றடையும் முயற்சியில் 6 இந்தோனேசியா பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர் என ஜகார்த்தா போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்தோனேசியாவின் பற்றம் தீவிலிருந்து மலேசியாவின் கடல் பகுதிக்குள் 13 இந்தோனேசிய புலம்பெயர்ந்தவர்களுடன் நுழைந்த படகு மலேசியாவின் ஹோஹோர் பகுதி அருகே விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இதில் 6 இந்தோனேசியர்களைக் கண்ட உள்ளூர் மீனவர்கள் மலேசியப் படையினருக்குத் தகவல் அளித்திருக்கின்றனர். மீண்டும் ஒரு இந்தோனேசியர் உயிருடன் கண்டறியப்பட்ட நிலையில், 6 இந்தோனேசியப் பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மலேசியாவின் ஜோஹோர் பகுதியில் நடந்த படகு
விபத்தில் 21 இந்தோனேசிய புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்திருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri