வாழைச்சேனையில் இருந்து காணாமல் போன படகு சென்னை காசிமேடு பகுதியில் கரையொதுங்கியுள்ளது
வாழைச்சேனையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன படகு சென்னை காசிமேடு பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த படகு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது முதல் நாளிலேயே படகு என்ஜின் பழுது ஏற்பட்டு விட்டது என்றும், காற்றுவாக்கில் அந்தமான் பகுதிக்கு சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த படகு நேற்று இரவு 11.30 மணியளவில் சென்னை காசிமேடு பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
மேலும், சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த IND TN 02 MM 2543 என்ற படகின் மூலம் திருவள்ளுர் மாவட்டம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதானி துறைமுகத்தில் உள்ளே நுழைந்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமக்கு தொலைபேசியில் தெரிவித்தாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமல் போன கடற்றொழிலார்களின் குடும்ப உறுப்பினர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்டஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட கடற்றொலில் அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் இதனோடு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
தீவு ஒன்றில் சிக்கியுள்ள காணாமல் போன மீனவர்கள் : டக்ளஸ் மீது குற்றச்சாட்டு




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 21 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri