பூனே கார் விபத்து: சட்டத்தில் இருந்து மகனை காப்பாற்ற தந்தைவழங்கிய பெருந்தொகை பணம்
இந்தியாவின்(India) பூனேயில் 17 வயதான இளைஞர் ஒருவருக்காக இரத்த மாதிரியில் மோசடி செய்ததாக கூறப்பட்டு இரண்டு மருத்துவர்களும், மருத்துவமனை பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 19 ஆம் திகதியன்று பூனேயில் இடம்பெற்ற வாகன விபத்தில், வாகனத்தை செலுத்தி வந்த 17 வயதான இளைஞர் மதுபோதையில் இருந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
எனினும், இந்த குற்றச்சாட்டில் இருந்து இளைஞரை விடுவிப்பதற்காக அவரது தந்தை, மருத்துவர்கள் இருவருக்கு சுமார் 3 இலட்சம் ரூபாயை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பணத்தை பெற்றுக்கொண்ட மருத்துவர்கள், குறித்த இளைஞரின் உண்மையான இரத்தமாதிரியை வழங்காமல், வேறொருவரின் இரத்த மாதிரி அறிக்கையை பொலிஸார் விசாரணைக்காக வழங்கியுள்ளனர்.
இதன்போது, இரத்த மாதிரி அறிக்கை தொடர்பில் சந்தேகம் கொண்ட பொலிஸார் குறித்த இரத்த மாதிரியை வேறு மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பியபோது உண்மை வெளியாகியுள்ளது.
இதனையடுத்தே, மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உதவியாக செயற்பட்ட மருத்துவமனை பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |