இலங்கையில் சுமார் 25 வீதமானவர்களை பாதித்துள்ள நோய்
இலங்கையில் சுமார் 25 வீதமான மக்கள் உயர் இரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கு பேரில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் பேராசிரியர் பிரசாத் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
உலக உயர் இரத்த அழுத்த தினம் அண்மையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுஸ்டிக்கப்பட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
50 வீதமானவர்களுக்கு இரத்த அழுத்தம்
நாட்டில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 50 வீதமானவர்களுக்கு இரத்த அழுத்தம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
நகர் புறங்களைச் சேர்ந்த 26 வீதமானவர்களுக்கும் கிராமிய பகுதிகளைச் சேர்ந்த 23 வீதமானவர்களுக்கும் இரத்த அழுத்தம் காணப்புடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அதிகளவில் உப்பு உணவில் சேர்த்துக் கொள்வதனால் நீரிழிவு நோய் ஏற்படுவதாக பேராசிரியர் வைத்தியர் உதய ரலபனாவ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |