கல்முனையில் நடைபெற்ற இரத்த தான முகாம்
நற்பிட்டிமுனை Unity சமூக சேவை அமைப்பின் பூர்வாங்க சேவையாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது.
குறித்த முகாமானது நேற்று(13) நற்பிட்டிமுனை Unity சமூக சேவை அமைப்பின் தலைவர் அப்துல்லாஹ் முகமட் சாஜித் தலைமையில் நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலய ஆரம்ப பிரிவில் இடம்பெற்றுள்ளது.
திடீர் விபத்துக்கள்
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என்பதற்கமைவாக நற்பிட்டிமுனையில் சில வருடங்களாக இயங்கிவரும் நற்பிட்டிமுனை Unity சமூக சேவை அமைப்பானது திடீர் விபத்துக்கள்,சத்திர சிகிச்சைகளுக்கான அவரச தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இவ் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டுள்ளது.
காலை முதல் மாலை வரை அமைப்பின் செயலாளர் அமானுல்லாஹ் முகமட் சாகீர் நெறிப்படுத்தலில் , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவ அதிகாரி வைத்தியர் கிருஸ்ணமூர்த்தி வித்தியா ,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள்,சமூக அமைப்பின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கு கொண்டனர்.
மேலதிக தகவல் : ஆசிக், ராயூகரன்