செயற்கையான குருதிச்சுற்றோட்ட தொகுதி கருவி யாழ்.இளைஞரால் கண்டுபிடிப்பு
செயற்கையான குருதிச்சுற்றோட்ட தொகுதி கருவியொன்றை யாழினை சேர்ந்த இளைஞர் கோகுலன் கண்டுபிடித்துள்ளார்.
இந்த கருவிக்கு '2009 இதயம்' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

செயற்கையான குருதிச்சுற்றோட்ட தொகுதி
இதயம் செயலிழந்தாலோ மாரடைப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மூன்று நிமிடங்களுக்குள் குறித்த செயற்கை குருதிச்சுற்றோட்டத் தொகுதி கருவியை உடலில் இணைத்தால் உயிரிழப்பில் இருந்து தவிர்க்க முடியும்.

இது முக்கியமான மருத்துவ கண்டுபிடிப்பாக
இருக்கும் எனவும், நுரையீரல் செயலிழந்தவர்களும் இதனை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதயமும் நுரையீரலும் செயலிழந்தவர்கள் இந்த கருவியைப் பயன்படுத்தக்கூடிய
வகையில் இதயமும்,நுரையீரலும் இணைந்த செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதியாக
இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri