ஆதிவாசிகளின் கலாசாரத்தை சிதைக்கும் யூடியூப் வீடியோ! வழக்குத் தொடுக்க தீர்மானம்
ஆதிவாசிகளின் கலாசாரத்தை சிதைக்கும் வகையிலான காணொளியொன்றை வெளியிட்டுள்ள யூடியூப் சேனல் ஒன்றுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவுள்ளதாக ஆதிவாசிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஆதிவாசிகள் சங்கத்தின் தலைவரான ஊருவரிகே வன்னியலா எத்தோ, செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
ஆதிவாசிகளின் கலாசாரம்
அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், வர்த்தக நோக்கில் பணம் சம்பாதிப்பதை மட்டும் இலக்காகக் கொண்டு, ஆதிவாசிகளின் கலாசாரத்தை சிதைக்கும் வகையில் இரண்டு யூடியூபர்கள் இணைந்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு, அதற்கு எதிரான எங்கள் ஆட்சேபங்களை தெரிவித்தோம்.
எனினும் குறித்த காணொளி இன்னும் அகற்றப்படவில்லை.
இதன் காரணமாக ஆதிவாசிகள் தொடர்பில் சமூகத்தில் நிலவும் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையிலும், ஆதிவாசிகளின் மொழியைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள குறித்த காணொளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஊருவரிகே வன்னியலா எத்தோ தெரிவித்துள்ளார்.