தும்புத்தொழிற்சாலையை முற்றுகையிட்ட பருத்தித்துறை பொலிஸார் (Photos)
தும்புத்தொழிற்சாலை எனும் பெயரில் இயங்கி வந்த சட்டவிரோத மணல் விற்பனை, கல் உற்பத்தி விற்பனை நிலையம் பருத்தித்துறை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (22.09.2023) பதிவாகியுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கை
தென்னந்தும்பு உற்பத்தி தொழிற்சாலை என்ற பெயரில் அனுமதி பெறப்பட்டு பாரியளவில் மணல் அகழப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதுடன், மணலால் ஆன கற்களும் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 7:30 மணியளவில் 15இற்கு மேற்பட்ட பொலிஸார் குறித்த தொழிற்சாலையை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் நான்கு மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஜேசீபி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள், நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஜேசீபி வாகனத்துடன் இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் பாரிய குழி தோண்டப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்தே சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
