தமிழர் பகுதியில் இடம்பெற்ற மோசமான செயல்! சுற்றிவளைப்பில் சிக்கிய மூன்று பெண்கள்
மட்டக்களப்பு பாசிக்குடாவில் ஹோட்டல் என்ற பெயரில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது பெண் முகாமையாளர் உட்பட மூன்று பெண்களை நேற்று (07) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறிக்கை
இதற்காக, அவர்கள் முதலில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து, அனுமதி பெற்ற பின்னர், சம்பவ தினமான நேற்று மாலை 5:00 மணியளவில் விடுதியை முற்றுகையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.
மோசமான செயல்
முற்றுகையின் போது, தவறான தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் மற்றும் விடுதியை நிர்வகித்த பெண் முகாமையாளர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் - பவன்