லாகூர் விமான நிலையம் அருகில் அடுத்தடுத்து மூன்று குண்டு வெடிப்புகள்
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று (08) பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் (Lahore ) விமான நிலையம் அருகே அடுத்தடுத்து மூன்று குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் அச்சம்
அங்கு பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியுள்ளதுடன், அடுத்தடுத்து பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Three blasts reported near Lahore Walton Airport!
— ANURAAG ॐ SHARMA 🇮🇳 (@7ANURAGSHARMA) May 8, 2025
Panic erupts in Pakistan.#Lahore #LahoreAirport pic.twitter.com/I7iK0i3JSw
மேலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறியதுடன், லாகூர் விமான நிலையத்திலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்ததாக கூறப்படுகிறது.
லாகூரில் குண்டு வெடிப்பு நடந்ததை அந்நாட்டு பொலிஸார் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானநிலையத்திற்கு அருகிலுள்ள வோல்டன் வீதியில் குண்டு வெடிப்பு நடந்தது என்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நள்ளிரவில் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை மூடியதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

பஞ்சாப்பில் ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்? - இடைமறித்த இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு News Lankasri
