மட்டக்களப்பில் வெடிப்பு சம்பவம்: இராணுவத்தினர் விசேட விசாரணை
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூணொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டின் அறையொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெடிவிபத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் பலத்த சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் குழு
இந்த நிலலையில் இன்று (16) தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு அவர்கள் மேற்கொண்ட சோதனையடிப்படையின் குறித்த வீட்டின் பின்பகுதியிலுள்ள அறை பகுதியை கொண்ட கூரை மீது இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த குண்டில் இருந்து வெளிவந்த சிறிய ரக சன்னங்கள் வியில் அடைக்கப்பட்ட தகரங்களை துளைத்துக் கொண்டு போயுள்ளதை கண்டு பிடித்தனர்.
இதனை தொடர்ந்து வெடித்த குண்டில் இருந்து வெளியேறிய சிறிய ரக சன்னங்களை கண்டுபிடித்தது மீட்டதுடன் குண்டை யாரே வீட்டின் பின்பகுதி வீதிவழியாக சென்று வீட்டின் மீது வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் இது தயாரிக்கப்பட்ட குண்டாக இருக்கலாம் எனவும், இந்த குண்டை முதல் முதல் பார்ப்பதாகவும் இது புது வகையான தயாரிப்பாக இருக்கலாம் எனவும் இது எவ்வாறான தயாரிப்பு என கண்டறியப்படவில்லை எனவும் தயாரிக்கப்பட்ட குண்டை பரீட்சித்துப் பார்ப்பதற்காகவா? யார் செய்தனர்?, ஏன்? எதற்காக? செய்தனர் என பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடு க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக செய்தி- பவன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |