பலுசிஸ்தானில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி - 10 பேர் படுகாயம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் உள்ள சந்தை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவம் இன்றைய தினம் (26.02.2023) காலை இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து, பர்கான் துணை ஆணையர் அப்துல்லா கோசோ டான் (Abdullah Khoso Dawn) தெரிவித்துள்ளதாவது, "பலுசிஸ்தான் ரக்னி சந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் விபத்து ஏற்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
மனிதக் குலத்தின் எதிரிகள்
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைக்காக அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர்.
குண்டுவெடிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பலுசிஸ்தான் முதல்வர் மிர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ (Mir Abdul Qudoos Bizenjo), "குற்றவாளிகளைக் கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அப்பாவி மக்களின் இரத்தத்தைச் சிந்துபவர்கள் மனிதக் குலத்தின் எதிரிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ( Shehbaz Sharif) குண்டுவெடிப்புக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், இதுகுறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.
குண்டு வெடிப்பு தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
