அவிசாவளையில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு : ஒருவர் பலி
அவிசாவளை, மாதொல பிரதேசத்தில் இரும்பு பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மஸ்கெலியாவைச் சேர்ந்த 49 வயதுடையவராகும். படுகாயமடைந்த நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் மற்றுமொரு நபருடன் இரும்பு பொருட்களை அடுக்கி வைக்கும் போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வெடி விபத்து
வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த அவிசாவளை குற்றப்பிரிவு அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பரிசோதகர்கள் வரவழைக்கப்படுவார்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் அவிசாவளை பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
