யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)
யாழ். பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இன்றைய தினம் (23.07.2023) ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.



மலரஞ்சலியுடன் அகவணக்கம்
இதனையடுத்து, பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.
நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.




| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri