பிரித்தானியாவில் ஒன்றுதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் (Photos)
கறுப்பு ஜூலை படுகொலை இடம்பெற்று 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரித்தானியாவின் புலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பேரணி ஒன்றை நடத்தினர்.
தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் நடந்தேறி 40 வருடங்கள் உறுண்டோடிவிட்டன.
பிரித்தானியாவில் இன்றைய தினம் (25.07.20223) Trafalgar சதுக்கத்தில் இந்த எழுச்சி பேரணி இடம்பெற்றது.
மாலை 5 மணியளவில் பிரத்தானிய கொடி மற்றும் தமிழீழ தேசிய கோடி ஆகியன ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்
பிரித்தானியாவில் உள்ள பல தமிழ் அமைப்புக்கள் மற்றும் தமிழ் பாடசாலைகள் சங்கங்கள் போன்ற அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நடத்திய இந்நிகழ்வில் இனப்படுகொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
இதேவேளை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் உரைகள் இடம்பெற்றதுடன் தமிழர் மீதான படுகொலைகளை மாணவர்கள் கலை வடிவில் வெளிப்படுத்தினர்.
அதேவேளை 1983 இனப்படுகொலையின் பதிவுகளை சுமந்த விளக்க புகைப்பபட கண்காட்சியும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் Elliot colburn MP, சர்வதேச குற்றவியல் மற்றும் மனித உரிமைகள் சட்டம் போன்ற சட்டத்துறைகளில் சர்வதேச சட்ட நிபுணரான Toby Cadman, வெளியுறவுக் கொள்கை நிபுணர் கலாநிதி மதுரா இராசரத்தினமும் மற்றும் PEARL அமைப்பின் பிரதிநிதி அபிராபி ஆகியோரும் சிறப்புரைகள் ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |