கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளே! சிங்கள ராவய அமைப்பு கொந்தளிப்பு
கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல. அனைவரும் விடுதலைப்புலிகளே. அவர்களை இங்கே நினைவுகூர அனுமதிக்க முடியாது.
இவ்வாறு சிங்கள ராவய அமைப்பினர் கோஷம் எழுப்பியுள்ளனர்.
பொரளை பொதுமயானத்துக்கு அருகில் கறுப்பு ஜூலை இனப்படுகொலை நினைவேந்தல் நேற்று(23.07.2023) கடைப்பிடிக்க திட்டமிட்ட நிலையில் சிங்கள ராவயவினர் அவ்விடத்தில் குழப்பம் விளைவித்துள்ளனர்.
கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல
இதன்போது "புலம்பெயர் தமிழர்கள் நாட்டைப் பிரிக்க முயல்கின்றார்கள். அரச சார்பற்ற நிறுவனங்களிடம் பணத்தைப் பெற்று இப்படியான நினைவேந்தல்களை இங்கு செய்யவேண்டாம்.
கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல. அனைவரும் விடுதலைப்புலிகளே.”என்றும் அவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.
you may liker this video...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
