பிரித்தானியாவில் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
தமிழினத்தின் மீதான சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக அமைந்த 1983 - கறுப்பு ஜூலையின் 40ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, பிரித்தானியாவில் எழுச்சிப் பேரணியொன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் உள்ள பல தமிழ் அமைப்புகள், தமிழ் பாடசாலைகள், சங்கங்கள், வழிபாட்டு தலங்கள் போன்றன ஒன்றிணைந்து இந்த எழுச்சிப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.
எதிர்வரும் ஜூலை 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு Trafalgar சதுக்கத்தில் எழுச்சிப் பேரணியொன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இந்த நிகழ்வு தமிழ் ஈழம் அமைதலே தமிழ் மக்களின் நிரந்தர பாதுகாப்பிற்கான ஒரே தீர்வு அத்துடன் இலங்கையின் சுபீட்சத்திற்கும், ஸ்திரத்தன்மைக்குமான பாதையும் இதுவேதான் என்ற கருப்பொருளைக் கொண்டு அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலையின் போது சிங்களவர்களின் கொடூரங்களை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி, கறுப்பு ஜூலையால் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களின் வாக்கு மூலங்கள், இன அழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட யூத மக்களின் பிரதிநிதிகள், மூத்த பிரித்தானிய நாடாளுமன்ற அங்கத்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் பேச்சுக்கள், மற்றும் கலை நிகழ்வுகள் ஆகியன இடம்பெறவுள்ளன.
ஆகவே, அனைத்து பிரித்தானியத் தமிழ் மக்களும் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு Trafalgar சதுக்கம் வந்து இப்படி ஒரு இன அழிப்பைத் தவிர்க்க வேண்டுமென்றால் அதற்கான ஒரே வழி தமிழ் ஈழம் எனக் கூற வருமாறு அன்புடன் அழைக்கிறோம் என பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri