நேற்று - இன்று- நாளை எனும் தொனிப்பொருளில் கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு
கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு " நேற்று - இன்று- நாளை" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நேற்றையதினம்(27) இடம்பெற்றது.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.
கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு
கருத்தரங்கானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்த பகிரங்க அரசியல் கருத்தரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பம், சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சி.சிவமோகன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.





இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 17 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri