கறுப்பு ஜூலை தின பதிவு: கனடா தூதுவருக்கு வலுக்கும் எதிர்ப்பு
‘‘கனடா தூதுவர் படுகொலைகளைத் தெரிவு செய்து கண்டிக்கின்றார்'' என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து கனடா தூதுவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு எதிராகவே இவ்வாறு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் 1983ஆம் தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டமையை நினைவுகூர்ந்து கனடா தூதுவர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும் வன்முறைகளையும் நாகரீகமுள்ள எந்த மனிதனும் கண்டிப்பான். இடம்பெற்ற வன்முறைகளை நாங்களும் முழுமனதுடன் கண்டிக்கின்றோம்.
சரணடைந்த 600 பொலிஸார்
அதேவேளை அக்காலப்பகுதியில் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து தமிழர்களைக் காப்பாற்றிய சிங்களவர்களை நாங்கள் நினைவுகூருகின்றோம் என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரத்வீரசேகர கூறியதாவது, 1983ஆம் ஆண்டு ஜூலையின் பின்னர் தமிழ் காடையர் கும்பல்களால் வடக்கிலிருந்து துரத்தப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான சிங்களவர்கள் தமிழர்களை நாங்கள் நினைவு கூறுகின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் சிங்கள கர்ப்பிணித் தாய்மார்கள் கொல்லப்பட்டதையோ அநுராதபுரத்தில் 200 யாத்திரீர்கள் கொல்லப்பட்டதையோ அரந்தலாவையில் இளம் பிக்குகள் கொல்லப்பட்டதையோ ஆயுதம் ஏந்தாத சரணடைந்த 600 பொலிஸார் தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதையோ கனடா தூதுவர் கண்டித்ததாக நாங்கள் கேள்விப்படவில்லை.
படுகொலைகளைத் தெரிவு செய்து கண்டிப்பது அந்த நபரின் நாகரீக இயல்புகளைக் கேள்விக்குட்படுத்துவதுடன் அவர்களின் இரகசிய நிகழ்ச்சி நிரல்களை அம்பலப்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
