ஊடக அமைப்புகளின் பங்கேற்புடன் நீதி வேண்டி யாழில் நாளை 'கறுப்பு ஜனவரி' போராட்டம்
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் நகரில் நாளை (31) 'கறுப்பு ஜனவரி' கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பையும் பெறும் நோக்கில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்படவுள்ளது.
மேலும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர ஊடக இயக்கம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம், ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் பங்கேற்புடன் 'கறுப்பு ஜனவரி' போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam
