இலங்கை மக்களுக்கு ஆதரவாக லண்டனில் கறுப்பு தின போராட்டம்(Photo)
லண்டன் மாநகரில் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக இலங்கையில் வடக்கு கிழக்கில் அனுஷ்டித்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் முகமாக லண்டனில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
13ஆவது திருத்தம் எமது உறவுகளுக்கான ஒரு தீர்வு அல்ல
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், 13ஆவது திருத்தம் என்பது ஈழத்தில் உள்ள எமது உறவுகளுக்கான ஒரு தீர்வு அல்ல. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட்டு நீதி வழங்க வேண்டும்.
ஒற்றையாட்சிக்குள் 13வது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எமது உரிமைகளை வழங்க முடியும் என இந்தியாவோ சர்வதேசமோ நினைக்க கூடாது என்று கூறியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் பதாகைகள், புலிக்கொடிகள் போன்றவற்றை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற
இப் போராட்டத்தில் பல புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
