யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் போராட்டம்
இலங்கை சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாள் என குறிப்பிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று (4.1.2024) ஆரம்பமான போராட்டம் ஊர்வலமாக யாழ்ப்பாண மாவட்ட செயலக முன்றலை வந்தடைந்து பதாகைகள் தாங்கியவாறு போராட்டம் நடைபெற்றுள்ளது.
பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம்
இதன்போது இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள், அடக்குமுறைக்கு உள்ளாக்கும் சட்ட மூலங்களை நீக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தவாறு கருப்புப் பட்டியணிந்து, கைகளிலே பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri