நிரந்தர தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதி.. ஆரம்பிக்கப்பட்டுள்ள கறுப்பு பட்டி போராட்டம்!
ஆயிரம் ரூபா தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கியதை தொடர்ந்து பெருந்தோட்ட நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்த்தினை செய்ய முடியாது என கூறி விலகி கொண்டது.
ஆனால் தற்போது தோட்டங்களில் வேலை செய்கின்ற நிரந்தர தோட்டத் தொழிலாளர்களை கைகாசு தொழிலாளர்களாக மாற்றிவருவதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை கறுப்பு பட்டி போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதாகவும் செங்கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் தெரிவித்தார்.
"நிரந்தர தோட்டத்தொழிலாளர்களை கைகாசு தொழிலாளர்களாக மாற்றுவதற்கு பல உத்திகளை அவர்கள் கையாண்டு வருகிறார்கள் முறைசார முறை ஆர் எஸ்எம் பங்கு பரிவர்த்தனை மூலமான வருமான திட்டம்.
மேன்பவர்; இவ்வாறான திட்டங்களை பயன்படுத்தி நிரந்தர தோட்டத்தொழிலாளர்களை கைகாசு தொழிலாளர்களாக மாற்றி வருவதாகவும் இதனால் தோட்டத்தொழலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, சேவைக்கால பணம்,சகாய நிதியம்,ஏனைய கொடுப்பனவுகள்,காலம் காலமாக வழங்கி வந்த தேயிலை தூள் உள்ளிட்ட பல உரிமைகள் இதன் மூலம் பறிக்கப்பட்டுள்ளன.
தொடர் போராட்டம்
இதனை ஆட்சேபிக்கும் முகமாக இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவும் தற்போது இந்த போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் நூறு இருநூறு பேர் வேலை செய்கின்ற சில தோட்டங்களில் ஆறு ஏழு பேர் மாத்திரம் நிரந்தர தொழிலாளர்களாக உள்ளதாகவும் இதனால் தோட்டங்கள் மூடு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த போராட்டத்தில் கட்சி பேதமின்றி அனைத்து தொழிலாளர்களும் முதலாம் திகதி முதல் 07 ம் திகதி வரை இந்த போராட்டத்தில் இணைந்து முன்னெடுக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
இது குறித்த செங்கொடி சங்கத்தின் பொருளாளர் விசுவாசம் ராஜலக்சுமி கருத்து தெரிவி;க்கையில் தேயிலை ,ரப்பர் தோட்டங்களில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் தொன்று தொட்டு நிரந்தர தொழிலாளர்களாகவே இருந்து வந்துள்ளார்கள் அதனால் முழுமையாக இல்லா விட்டாலும் குறைந்தளவேனும் தொழில் பாதுகாப்பு இருந்துவந்தது. ஆனால் தற்போது தொழிலாளர்களை நசுக்குவதற்காக பல பெயர்களில் ஆர்எஸ்எம்.
போட்லீப்,துண்டுக்காணி,போன்றவற்றை வழங்கி அவர்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் விபத்துக்களின் போது வழங்கப்படும் நஸ்ட்ட ஈடு இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தொழில் நீடிக்கும் என்றால் வறுமையில் வாடும் தொழிலாளர் மேலும் நசுக்கப்படுவார்கள் பலவந்தமாக செய்யப்படும் முறையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்.எனவே தொழிலாளர் தமது உரிமைக்காக ஓர் அணியில் திரள வேண்டும் என தெரிவித்தார்
இது குறித்து நிர்வாக குழு உறுப்பினர் தவராஜா கருத்து தெரிவிக்கையில் குறித்த போராட்டம் மாத்தறை,மாத்தளை தெனியாய இரத்தினபுரி,ஹட்டன் மஸ்கெலியா உள்ளிட்ட பல பிரதேசங்களில் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாகவும்” அவர் மேலும் தெரிவித்தார்.

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
