கச்சத்தீவு விவகாரத்தில் இந்திரா காந்தி மீது விமர்சனம்: மீண்டும் களத்தில் பாஜக!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மதுரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், காங்கிரஸுடன் கூட்டணி வைத்து திமுக ஆட்சியில் இருந்தபோது, அது என்ன செய்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
கச்சத்தீவை மீட்டெடுக்க அவர்கள் எப்போதாவது முயற்சித்தார்களா என்றும் அவர் வினவியுள்ளார்.
விவாதங்கள்
கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி ஒப்படைத்த போது, கருணாநிதியே தமிழக முதல்வராக இருந்தார்.
இந்தநிலையில் சட்டசபையில் திமுக தலைவர் துரை முருகன் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டிய நாகேந்திரன், கச்சத்தீவு, மாநில அரசாங்கத்துக்கு தெரியாமல் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டதை விமர்சித்துள்ளார்.
ஒரு நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசுக்குத் தெரியாமல் வேறு நாட்டிற்கு ஒப்படைக்க முடியுமா?” என்றும் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கச்சத்தீவு தீவு தொடர்பான பிராந்திய மற்றும் கடற்றொழில் உரிமைகள் தகராறு தொடர்பாக தமிழ்நாட்டில் நடந்து வரும் விவாதங்களுக்கு மத்தியில் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



