ஐரோப்பாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் - கொன்று குவிக்கப்படும் பறவைகள்
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் இந்த கோடையில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான பறவைகள், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை காட்டு மற்றும் வீட்டுப் பறவைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்களுக்கமைய, கடந்த இலையுதிர்காலத்தில் இருந்து இதுவரையில் 47.5 மில்லியன் பறவைகள் அழிக்கப்பட்டன.
கோழிப்பண்ணைகளில் 2,500 பறவைக் காய்ச்சல்கள் பதிவு
ஐரோப்பிய ஒன்றியத்தின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குறிப்பு ஆய்வகம் ஆகியவற்றின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, காட்டு பறவைகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் கோழிப்பண்ணைகளில் கிட்டத்தட்ட 2,500 பறவைக் காய்ச்சல்கள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் காட்டுப் பறவைகளில் 3,500 க்கும் மேற்பட்ட தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் 190 நோய் தொற்றுகள் உயிரியல் பூங்காக்கள் போன்ற வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விலங்குகளிடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுகல் முதல் ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள நோர்வே தீவுக்கூட்டம் ஸ்வால்பார்ட் வரை பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் தெரிவித்துள்ளது.
மிகக் கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும்
அக்டோபர் 2021 முதல் செப்டம்பர் 9 வரை மொத்தம் 37 நாடுகளில் பறவைக் காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அறிக்கை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் எப்போதாவது மனிதர்களைப் பாதிக்கலாம் எனவும், இலேசான அல்லது மிகக் கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் தெரிவித்துள்ளது.
திங்களன்று, ஸ்பெயினின் சுகாதார அமைச்சகம், குவாடலஜாராவில் உள்ள கோழிப் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளிக்கு செப்டம்பர் மாத இறுதியில் பறவைக் காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் அறிகுறியற்றவராக இருந்தார் எனவும, அவர் எதிர்மறையாக சோதிக்கப்படும் வரை தனிமையில் வைக்கப்பட்டார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பறவைகளுடன் பணிபுரிபவர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய நிறுவனம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
