நாடாளுமன்றத்தில் கேலிக் கூத்தாட அனுமதிக்க முடியாது: எதிர்கட்சியை எச்சரித்த பிமல் ரத்நாயக்க
எதிர்க்கட்சியினர் சபாநாயகருக்கு மேலாக செயற்பட முனைவதாகவும் சிறுபிள்ளைத்தனமாக கேலிக் கூத்தாடுவதாகவும் அவை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க எதிர்க் கட்சியினரை கடுமையாக சாடினார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பமானதை தொடர்ந்து சபாநாயகர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விரிவான விளக்கமொன்றை சமர்ப்பித்தார்.
அதன் பின்னர் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க உரையாற்றும் போது,பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரித்தமை தொடர்பில் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறு கேட்ட போது கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
குழப்பம்
அப்போது அஜித் பி பெரேரா நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி கேட்டதை தொடர்ந்து,பதிலளித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சபாநாயகர் என்ற வகையில் ஜனநாயக ரீதியில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்வதற்காக சகல ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளீர்கள். நீங்கள் கட்டுப்பட்டில்லை உங்களுக்கு வழங்கப்படும் தகவல்களை தெரிவிப்பதற்கு, இதற்கு முன்னர் இருந்த சபாநாயகர்கள் அவ்வாறு செய்ததில்லை.
ஜனநாயக் ரீதியில் சபாநாயகர் செயற்படும் போது இவர்களுக்கு என்ன நடந்துள்ளது.சிறுப்பிள்ளைத்தனமாக கேலிக் கூத்தாட நாடாளுமன்றத்தில் அனுமதிக்க முடியாது என்றார்.



