சிறு விடயங்களை கூட பாரதூரமாக குழப்பும் நாமல் போன்றோர்..! பிமல் பகிரங்கம்
நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாச போன்றோர் சிறு விடயங்களை கூட பாரதூரமாக குழப்ப முயற்சிக்கின்ற நிலையில் மக்கள் எமது ஆட்சியில் சரியான அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஆவரங்கால் தொண்டைமானாறு வீதி புனரமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று(10.02.2026) ஆரம்பித்து வைக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எமது ஆட்சியில் சரியான அபிவிருத்தி
கல்வி அமைச்சரின் விவகாரம் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவரின் சில செயற்பாடுகள் தொடர்பிலும் தெரிவித்தார்.
மேலும் எமது அரசாங்கம் கொழும்பை மையமாகக் கொண்டு அரசியல் நடாத்தாது இலங்கை முழுவதையும் வடக்கு கிழக்கை ஒன்றிணைத்து அனைத்து அபிவிருத்தி வேலை திட்டங்களையும் செய்து தருவதற்கு முன்வந்துள்ளது.
நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாச போன்றோர் சிறு விடயங்களை கூட பாரதூரமாக குழப்ப முயற்சிக்கின்றனர். எனவே மக்கள் எமது ஆட்சியில் சரியான அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியும். அதே போல இனவாதம் பேசுவதற்கும் நமது ஆட்சியில் இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, எமது அரசாங்கம் கூறியது போல ஜனாதிபதி தெரிவித்தது போல வடக்கிற்கு கிழக்கிற்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டு மக்களுக்கான அபிவிருத்தி வேலை திட்டங்கள் அனைத்தும் முன்கொண்டு செல்லப்படும்.
கடந்த ஆட்சியாளர்கள் போல் இல்லாதது நமது அரசாங்கம் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வினைத்திறனாக செயலாற்ற முன்வந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
அரசாங்கம் மக்களின் தேவைகளை அறிந்து
நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபராக தான் கடமையாற்றிய காலத்தில் குறித்த விதியானது பயணிக்க முடியாத நிலையிலும் வீடு தொடர்பில் அவர்தி பணிகளை மேற்கொள்ளுமாறு பெற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று இருந்தது.
ஆனால் எம்மால் வேலைத்திட்டங்களை முழுமையாக செய்ய முடியவில்லை.

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் மக்களின் தேவைகளை அறிந்து அபிவிருத்தி திட்டங்களை பூர்த்தி செய்து தருவதற்கு இணங்கியுள்ளது.
எனவே இந்த அரசாங்கமானது மக்களின் தேவைகளை அடைந்து அவர்களுக்கு தேவையான சகல அவிழ்த்து திட்டங்களை மேற்கொள்ளும் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.






வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam