எமது வலுவான அரசியல் கொள்கை: பிமல் ரத்நாயக்கவின் உதாரணம்
எமது அரசியல் கொள்கை எவ்வளவு வலுவானது என்றால், எதிரணியில் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தலைவர்கள் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“எமது அரசியல் கொள்கை எவ்வளவு வலுவானது என்றால், எதிரணியில் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தலைவர்கள் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
சம்பள உயர்வு
கடந்த காலங்களில் பதவி, சலுகைகள் வழங்கப்பட்டே ஆதரவாக வாக்கு பெறப்பட்டது. ஆனால், நாம் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கி மலையக எம்.பிக்களின் ஆதரவைப் பெற்றோம்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வி.இராதாகிருஷ்ணன் ஆகியோரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பியும் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 35 நிமிடங்கள் முன்
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan